நியூசிலாந்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2026 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு
2026ஆம் ஆண்டுக்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு, நியூசிலாந்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவீரர்களின் நினைவைப் போற்றும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
மாலை 5:40 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. மாவீரர் கப்டன் கொள்கைநிறை அவர்களின் தாயார் திருமதி மேரி பாத்திமா ஜேசுராசா அவர்கள் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாலை 5:43 மணிக்கு நியூசிலாந்து தேசியக் கொடியும், மாலை 5:47 மணிக்கு தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றப்பட்டன.
நியூசிலாந்து தேசியக் கொடியை பாராளுமன்றத்துக்கு சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் உறுப்பினராக உள்ள கெளரவத்துக்குரிய திரு. Michael Wood அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
மாலை 5:52 மணிக்கு, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையிலிருந்து சில பகுதிகள் ஒலிபரப்பப்பட்டன. மாலை 6:05 மணிக்கு மாவீரர் நினைவு மணி ஒலிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 6:06 மணிக்கு அகவணக்கம் இடம்பெற்றது. மாலை 6:07 மணிக்கு பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவீரர்களுக்குமான நினைவுச் சுடர்களும் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டன.
பிரதான ஈகைச்சுடரை, மாவீரர் மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களின் தாயார் திருமதி வசந்தமலர் வீரகுலசிங்கம் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை வகுப்பு அறிக்கை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை வகுப்பு அறிக்கை இடம்பெற்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவீரர்களின் நினைவுகளை நெஞ்சில் சுமந்தவாறு மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர்.
மாவீரர்களின் தியாக வரலாற்றையும் அவர்களின் நினைவுகளையும் அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் வகையில், 2026ஆம் ஆண்டுக்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.









Post a Comment